எங்களைப் பற்றி


கர்த்தருடைய வருகைக்கு வழியை ஆயத்தப்படுத்துதல்!

தேவ மனிதர்

ஓர் இந்து பாரம்பரியத்தில் பக்தி வைராக்கியமாய் வளர்ந்த சகோதரர் சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள், தம் 16-ஆம் வயதில், ஜீவனுள்ள இயேசுகிறிஸ்துவின் தொடுதலை உணர்ந்தார். அந்த ஓர் ஆச்சரியமான சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது. அவர் தம் 17-ஆம் வயதில் ஊழியத்திற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார். சகோதரர் சாதுவைப் பலர் பிரியமாக ‘சாது ஐயா’ என்று அழைப்பர். அவர் ஆண்டவருக்காக உலகம் முழுவதும் உண்மையாக ஊழியம் செய்து வருகிறார்.

செய்தி

சாது ஐயாவின் அன்பும் இரக்கமும் நிறைந்த செய்திகள், சாதி, நிறம், இனம் மற்றும் மதம் ஆகிய வேற்றுமைகளைக் கடந்து இலட்சக்கணக்கான மக்களைத் தொட்டு வருகின்றன. அவருடைய செய்திகள் அனைத்து விசுவாசிகளின் பரிசுத்த வாழ்க்கைக்கு சவால் விடுகின்றன. அவர் பூமியில் தேவனுடைய ராஜ்யத்தை விரிவுப்படுத்தும் பணிக்காக, ஆவியானவரால் நடத்தப்பட்டு வருகிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கென மணவாட்டியை ஆயத்தம் பண்ண, ஆண்டவர் அவரை விசேஷமாக அழைத்திருக்கிறார்.

சுவிசேஷப்பணி

சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் இயேசு ஊழியங்களின் நிறுவனர் ஆவார். இது ஒரு தீர்க்கதரிசன-சுவிசேஷப் பணியாகும். கிறிஸ்து இயேசுவை அதிகம் அறியாத சமூகத்திற்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்கான கர்த்தரின் அழைப்பை சாது ஐயா அவர்கள் இவ்வூழியத்தின் மூலம் நிறைவேற்றி வருகிறார். சாது ஐயாவின் மீதுள்ள தேவனின் அளவுகடந்த அபிஷேகம், அற்புதங்கள் அடையாளங்கள் மூலம் வெளிப்படுகிறது. 1979-ஆம் ஆண்டு முதல், தேவன் சாது ஐயாவை உலகின் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று தமக்கு சாட்சியாக நிறுத்தியுள்ளார்.

நிதி நேர்மை

கிறிஸ்துவின் பணிக்காக நாங்கள் பெறும் ஒவ்வொரு காணிக்கையும் முக்கியமானதாகும். ஓர் ஊழியம் என்ற அடிப்படையில் நாங்கள் பெறும் நிதியை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது பற்றி நாங்கள் கர்த்தராகிய ஆண்டவருக்கும் மனிதருக்கும் கணக்குக் கொடுக்க கடமைப் பட்டுடிருக்கிறோம் .

'இயேசு ஊழியங்கள்' இந்தியாவின் தமிழ்நாட்டில் மதம் சார்ந்த அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பாகும். மேலும், இயேசு ஊழிய அமைப்பின் நிதி ஆண்டுதோறும் ஒரு தனியார் கணக்கியல் நிறுவனத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு தணிக்கை செய்யப்படுகிறது. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தணிக்கை தரநிலைக்கு ஏற்ப இந்தத் தணிக்கையும் உள்ளது. மேலும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகளின்படி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

ஊழியத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு நன்கொடையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவ அன்பை உலகிற்குப் பரைசாற்றுவதற்கும், இயேசு ஊழியங்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஊழியத்தின் நோக்கம்

சாது சுந்தர் செல்வராஜ் அவர்களின் தேவனுடைய அழைப்பை ஆதரிக்கும் வண்ணம், நமக்குக் கிடைக்கக்கூடிய நவீன தகவல்தொடர்பு வழிமுறைகளின் மூலம் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பு மற்றும் சுகமளிக்கும் செய்தியை எங்களால் இயன்ற அளவிற்கு பலருக்கும் எடுத்துச் செல்ல முயல்கிறோம்.