சாது ஐயாவின் சாட்சி
வாழ்வை மாற்றிய சாட்சி!
உங்களை பற்றி என்ன ?
அன்புள்ள நண்பரே,
சாது சுந்தர் செல்வராஜ் அவர்களின் வாழ்வை மாற்றிய இந்த சாட்சி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாலிப வயது சுந்தர் போலவே, ‘நீங்கள் எது உண்மை எனத் தேடுகிறீர்களா?’ கர்த்தராகிய இயேசு, (யோவான் 14:6)-ல் "நானே சத்தியமாயிருக்கிறேன்" என்றார். மேலும், (எரேமியா 10:10,1 யோவான் 5:20) -ல் "கர்த்தரே மெய்யான தெய்வம்" என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. வேதாகமமும் கர்த்தராகிய இயேசுவும் உண்மை என்பதை சகோ சாது அறிந்துகொள்ளும் வகையில், இந்த வேத வசனங்கள் அவரை ஆழமாகத் தொட்டன.
இந்த உண்மையும் முழுமையான சத்தியமும் ஓர் பக்தி வைராக்கியமுள்ள இந்து சகோதரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இனி இருளில் தள்ளாட வேண்டியதில்லை. 'கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே தேவன்; வந்து அவரைப் பின்தொடருங்கள்!' நீங்கள் கர்த்தராகிய இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்க விரும்பினால், இப்போது மனதார இந்தப் பிரார்த்தனையைச் செய்யுங்கள்.
"அன்பு நிறைந்த கர்த்தராகிய இயேசுவே! நான் உம்மை நம்புகிறேன். நீர்தான் மெய்யான தெய்வம் என்று நான் நம்புகிறேன். நான் செய்த பாவங்களுக்காக நீர் மரித்தீர் என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் என்னை மன்னிக்கும் தெய்வம்! என் பாவங்களை எல்லாம், கர்த்தராகிய இயேசுவே, மன்னித்துவிடுங்கள்! உங்கள் விலையேறப்பெற்ற இரத்தம் என் இருதயத்தை சுத்தம் செய்யட்டும். இப்போது உங்களை என் இரட்சகராக நான் ஏற்றுக்கொள்கிறேன்! கர்த்தராகிய இயேசுவே, என் இதயத்திற்குள் வாரும்! உம்மை நான் என் ஆண்டவராகவும், சொந்த இரட்சகராகவும் ஏற்றுக்கொள்கிறேன்! என் வாழ்க்கையில் நீர் வந்ததற்கு, கர்த்தராகிய இயேசுவுக்கு உமக்கு நன்றி! என்னை தேவனுடைய பிள்ளையாக மாற்றியதற்கு நன்றி! இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் எங்கள் பரிசுத்தமுள்ள நல்ல பிதாவே. ஆமென்! "
நண்பரே! நீங்கள் இந்த ஜெபத்தை மனப்பூர்வமாக ஜெபித்திருந்தால், இப்போது தேவனுடைய ராஜ்யத்தில் புதியதாய்ப் பிறந்திருக்கிறீர்கள் என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. நீங்கள் மேலும் கிறிஸ்துவுக்குள் வளர, வேதாகமத்தைப் படிப்பதும், உங்கள் பரலோகத் தகப்பனாகிய தேவனிடத்தில் தினமும் ஜெபிப்பதும் முக்கியம். நீங்கள் ஒரு நல்ல, வேதாகம சத்தியத்தின் அடிப்படையிலான சபையில் சேர்ந்துகொள்ளுங்கள். அங்கு நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ள முடியும். மேலும், உங்கள் சாட்சிகளை jmchennai@jesusminstries.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். நீங்கள் மின்னஞ்சல் அனுப்பினால், விசுவாசத்தில் வளர உதவும் சில ஆவிக்குரிய புஸ்த்தகங்களை உங்களுக்கு அனுப்புவோம். தேவன் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.
விசுவாச அறிக்கை
சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் தனது உள்ளத்தில் விசுவாசித்து தனது நாவினால் இவ்வாறு அறிக்கை செய்கிறார்:
- பரிசுத்த வேதாகமம் தேவனிடம் இருந்து வந்த ஒரு மாசற்ற பரிசுத்தமான வார்த்தையாகும். அந்த வார்த்தை எல்லாவற்றிலும் உயர்ந்தது மற்றும் சர்வதிகாரம் உடையது.
- ஒரே தேவனானவர் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று உருவில் நித்தியமாக இருக்கிறார்.
- இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டு, கன்னி மரியாளிடம் பிறந்தார்.
- அவர் ஒரு பாவமற்ற வாழ்க்கையை வாழ்ந்தார். நம்முடைய எல்லா பாவங்களையும் தாமே ஏற்றுக்கொண்டு மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். மேலும் பிதாவின் வலது பாரிசத்தில் நம் மத்தியஸ்தராகவும் அமர்ந்து நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார் .
- எல்லா மனிதர்களும் எல்லா இடங்களிலும் பாவத்தில் தொலைந்துபோய், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய ஆக்கினைத் தீர்ப்பை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிலுவையில் சிந்தப்பட்ட கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் இரட்சிப்பு கிடைக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
- கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்; மீண்டும் விரைவில் இந்த உலகிற்கு அவர் வரப்போகிறார்.
- பரிசுத்தமாக வாழ்வது கிறிஸ்தவ வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது, மேலும் நாம் ஒருவரில் ஒருவர் அன்பாய் இருந்து மற்றவர்களுடைய காயங்கள் மற்றும் சமூக தேவைகள் குறித்து அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தம்முடைய வாழ்க்கையை முழுவதுமாக ஆண்டவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கிற அனைவருக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் கிடைக்கிறது.
- பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்கு ஒன்பது வரங்கள் கிடைக்கின்றன, அவைகள் இன்று திருச் சபைக்காகவும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஊழியத்திற்காகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றது .