கட்டிடம் கட்டும் திட்டம்


நான் வீற்றிருக்க கூடிய என் சிங்காசனத்தில் என் பாதங்கள் தங்கும்படிக்கு ஓர் இடத்தை எனக்கு உருவாக்குங்கள்!

என் சிங்காசனம் நிலைநிறுத்தப்பட எனக்கு ஓர் இடத்தை உருவாக்குங்கள்!

என் வாழ்நாள் முழுவதும் சில அற்புதமான ஆவிக்குரிய தருணங்களை நான் அனுபவித்திருக்கிறேன். தேவனாகிய கர்த்தர் என்னிடம் தெளிவாகப் பேசி, அவருடைய நோக்கங்களை நிலைநிறுத்துவதற்கான வழிகாட்டுதல்களை பலமுறை அளித்திருக்கிறார்.

அத்தகைய தருணங்களில் சில…:

EndTimeProject
நவம்பர் 1983

திபெத் மற்றும் நேபாளத்தில் சுவிசேஷத்தை அறிவித்து தேவனுடைய மணவாட்டியை அவரது வருகைக்கு ஆயத்தப்படுத்த வேண்டும் என தேவன் என்னிடம் பேசினார்.

ஜனவரி 1991

தேவன் தமது தீர்க்கதரிசன குரலாக இருக்கும்படி, பல தேசங்களுக்குச் செல்லவும், அவருடைய வருகைக்காக அவரது உலகளாவிய சரீரத்தை ஆயத்தப்படுத்தவும் பேசினார்.

செப்டம்பர் 1997

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை அறிவிப்பதற்கு, ஒரு ஊழியத்தை ஸ்தாபிக்க தேவன் பேசினார்.

ஆகஸ்ட் 2000

தேவன் பூமியின் கடையாந்திரம் வரை செல்லவும் கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கிக்கவும் பேசினார்.

டிசம்பர் 2005

நாங்கள் தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவிக்கத் தொடங்கினோம்.

2008 - 2013

பூமியின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைவரை எட்டு மொழிகளில் தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷம் சென்றடைய தேவன் நமக்கு கதவுகளைத் திறந்து வைத்தார்.

டிசம்பர் 2015

தேவன் தம்முடைய சத்தத்தை ஒளிபரப்புவதற்கும் அவருடைய மகிமையை வெளிப்படுத்துவதற்கும் ஓர் இடத்தைக் கட்டும்படிப் பேசினார். - எரேமியா 25:30.

சில நேரங்களில் மிகவும் தயங்கினாலும், எனக்கு விதிக்கப்பட்ட நியமத்தில் நான் காலடி எடுத்து வைத்து, தேவனின் நோக்கங்களையும் அழைப்பையும் நிறைவேற்ற விரும்பினேன். மோசே தீர்க்கதரிசியைப் போலவே, என்னுடைய போதிய அறிவு, புரிதல் மற்றும் பயிற்சியின்மையே எனது தயக்கத்திற்கும் காரணமாக இருந்தன. ஆனால் நமது நல்ல தேவன் கிருபையும் இரக்கமும் கொண்டவராக, "உன் பிரயாணங்களில் நான் உன்னுடன் செல்வேன்" என வாக்குத்தத்தம் அளித்துள்ளார். தேவன் எனக்கு வழங்கிய அனைத்துப் பணிகளிலும், தொலைக்காட்சி ஊழியத்தை உருவாக்க நான் மிகவும் தயங்கினேன். ஆயினும், தேவன், ‘ஒரு ஞானமுள்ள தலைமை ஒளிபரப்புத் தொழில்நுட்பவியலாளர்’ போல, நான் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் கருணையோடும் பொறுமையோடும் எனக்குக் கற்றுக்கொடுத்தார். பன்னிரண்டு அலைவரிசைகளை நிறுவியவர் அவர்தான். நான் எஜமானின் கட்டளையைச் செய்யும் அவருடைய வேலைக்காரனாக இருக்கிறேன்.

நான் வீற்றிருக்க கூடிய என் சிங்காசனத்தில் என் பாதங்கள் தங்கும்படிக்கு ஓர் இடத்தை எனக்கு உருவாக்குங்கள்!

மார்ச் 3, 2007 அன்று, 40 நாள் உபவாசத்தில் நான் இருந்தபோது, மகிமை நிறைந்த ஒரு தேவதூதன், கம்பீரமாகப் பறந்து வந்து, என் அறைக்கு அருகில் நடுவானில் நிற்பதைக் கண்டேன். அவர் கைகளில் ஓர் அழகான சுருள் இருந்தது.

அவர் அந்தச் சுருளை விரித்தபோது, சுருளில் ஒரு கட்டடத்தின் அழகிய பெருந்திட்டத்திற்கான வரைபடத்தைக் (masterplan) கண்டேன். "தேவனின் மகிமை வந்து இதில் தங்கியிருக்க நீ இந்த இடத்தைக் கட்டவேண்டும்" என்ற வார்த்தைகளை நான் அதில் பார்த்தேன். மேலும் அந்தத் தூதன், “இந்தக் கட்டிடத் திட்டத்தைக் கவனமாகப் பார்த்து, அதை உன் இருதயத்தில் வைத்துக்கொள். அதைக் கட்டுவதற்குப் பிதாவின் நேரம் வரும்போது, நான் மீண்டும் உன்னைச் சந்திக்க வருவேன்” என்று கூறினார்.

வருடங்கள் கடந்தன. 2004 முதல் இப்போது வரை இந்தியாவில், குறிப்பாக சென்னையில் ஒரு சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது. ஆனால், 2015 நவம்பரில் பேரழிவு ஏற்பட்டது; பல வாரங்களாகப் பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது!

நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை அறிய அருமையான பங்காளர்கள் பலர் எங்களை அழைத்து விசாரித்தனர். நான் வியட்நாமில் ஊழியத்தில் இருந்தபோது, சென்னையில் மழை சீற்றத்துடன் பெய்துகொண்டிருந்தது. அதனால் எங்கள் அலுவலகத்திற்கு தொலைபேசியில் அழைத்து அங்குள்ள நிலவரத்தைக் கேட்டேன். எனது ஊழியர்கள் எனக்குப் படங்கள் மற்றும் அங்கிருந்த நிலைமை பற்றிய அறிக்கையை அனுப்பினர்.

படங்களைப் பார்த்ததும் அதிர்ந்துபோனேன். ஆறு அங்குல வெள்ள நீர் எங்கள் ஒளிபரப்பு மையத்தினுள் கரைபுரண்டு வந்தது; பிரதான ஒளிபரப்பு மையத்தின் முக்கிய வண்ணச் சுவருக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரு படத்தொகுப்பு (editing) அறை மற்றும் ‘UPS Power’ மின்சார இணைப்பு அறை ஆகியவை இரண்டடி தண்ணீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் இரண்டு மாதங்கள்வரை 24 மணி நேரமும் உழைத்து அத்தண்ணீரை வெளியேற்றினர். இந்த அறிக்கையால் நான் மனம் உடைந்தேன். இருப்பினும், மின்சார இணைப்பு அறை தண்ணீருடன் தொடர்பு கொண்டு வெடிக்காமல் அல்லது தீப்பிடிக்காமல் பாதுகாக்கப்பட்டது தேவனின் கிருபையே.

நான் லாவோஸில் உள்ள வியன்டியனில் தலைகுனிந்து, “இப்போது நான் என்ன செய்யவேண்டும், ஆண்டவரே?” என்று கேட்டேன். ஆண்டவர் தம் திட்டத்தைத் தெள்ளந்தெளிவாக வெளிப்படுத்தினார். அதற்கு அவர், “அங்கிருந்து வெளியேறு! நீ ஒரு நிலத்தை வாங்கி நிரந்தரக் கட்டிடம் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.

அந்த உத்தரவினால் உற்சாகமடைந்த நான், எனது ஊழியர்களை அழைத்து, பொருத்தமான இடத்தில் நிலத்தைத் தேடும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினேன். வியட்நாமில் இருந்து நான் மியான்மாருக்கு ஊழியத்திற்காகச் சென்றேன். இந்தத் திட்டத்தைப் பற்றி ஜெபித்துக்கொண்டிருந்தபோது, 2007-இல் “கட்டிடம் கட்டும் நேரம் வரும்போது மீண்டும் வருவேன்” என்று தூதன் என்னிடம் சொன்ன தரிசனம் எனக்குத் திடீரென்று நினைவுக்கு வந்தது. மீண்டும் அந்தத் தூதனின் வருகை இல்லாமல் நான் எப்படி இந்தத் திட்டத்தைத் தொடங்கமுடியும்? எனவே நான் காத்திருந்தேன்.

டிசம்பர் 4, 2015 அன்று காலை, மியான்மாரில் ஓர் ஊழியப் பயணத்தை மேற்கொண்டிருந்தபோது, என் வலது பக்கத்தில் ஒரு பிரசன்னத்தை உணர்ந்தேன். நான் கண்களைத் திறந்தபோது, ஒரு தூதனைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன். அவருடைய முதல் கேள்வி, "என்னை அடையாளம் தெரிகிறதா?" என்பதுதான். அவர் சிரித்த முகத்தைப் பார்த்த நான், “நிச்சயமாக அடையாளம் தெரிகிறது” என்றேன். "2007-இல் ஏஞ்சல் டிவியின் கட்டிடத் திட்டதிற்கான திட்டங்களை என்னிடம் கொண்டு வந்த தூதன் நீர்தான்" என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, “கட்டிடத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டதாகச் சொல்ல நான் பிதாவினால் அனுப்பப்பட்டேன். அதை முடிக்க உங்களுக்கு அதற்கான ஆதாரங்களும் உதவியும் வழங்கப்படும்" என்றார். இதனால் நான் மகிழ்ச்சியடைந்தேன், உடனடியாகப் பணியில் ஈடுபடத் தொடங்கினேன்.

கடைசி நாட்களில் கர்த்தருடைய சேனை உருவாக்கப்பட ஒரு இடத்தை கட்டி எழுப்புங்கள்!

இயேசு ஊழியத்தின் தலைமையகத்தில் அதிநவீன கலை மைய நிலையம் மற்றும் தீர்க்கதரிசன பயிற்சி மையமும் இருக்கும். உலகெங்கிலும் உள்ள மக்கள் கர்த்தருடைய வழிகளையும், அவரின் ஆழமான இரகசியங்களையும் கற்றுக்கொள்வதற்கும், அவருடைய பிரம்மிப்பூட்டும் வல்லமை மற்றும் மகிமை விவரிக்கப்படுவதைக் காண்பதற்கும் வருவார்கள்.

1983 நவம்பரில் நான் தெளிவாகப் பார்த்த ஒரு தரிசனம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது. ஒரு ஜெபக்கூட்டத்தில் நான் இருப்பதைப் பார்த்தேன். திடீரென்று, புனித சாது சுந்தர் சிங் பிரார்த்தனை மண்டபத்திற்கு வெளியே வந்து நிற்பதைக் கண்டேன். அவருடைய ஆசிர்வாதத்தைப் பெற நான் அவரை நோக்கி ஓடினேன். அவர் என்னை ஆசீர்வதிக்கக் குனிந்தார், பின்னர் என்னைத் தூக்கி தனது தோள்களில் உட்கார வைத்தார். நான் கீழே பார்த்தபோது, நான் இப்போது பரிசுத்த யோவான்ஸ்நானன் தோள்களில் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

யோவான்ஸ்நானன் இன்னும் என்னைத் தம் தோளில் சுமந்துகொண்டு ஓர் இருண்ட காட்டுக்குள் நடக்கத் தொடங்கினார். ஓர் ஒளிப்பந்து எங்களுக்கு முன்னால் சென்றது. அது வழியை ஒளிரச் செய்தது. சிறிது நேரம் நடந்த பின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி, என்னைக் கீழே இறக்கிவிட்டார். என் வலதுபுறத்தில் நன்கு ஒளிரும் பெரிய குகை ஒன்றைக் கண்டேன். அதில் ஆண்டவர் இயேசு ஒரு பெரிய பாறை மீது அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவரைச் சுற்றி ஏராளமான குழந்தைகள் இருந்தனர். அது ஏதோ ஒரு பயிற்சி மையம் என்று எனக்கு அப்போது தெரிந்தது. இப்போது, 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் தரிசனத்தின் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரிந்தது. கர்த்தர் தாமே தம் மக்களுக்குக் கற்பிக்க, பயிற்சியளிக்க மற்றும் அவர்களைத் தயார்படுத்துவதற்காக ஒரு பயிற்சி மையத்தை அமைக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (மீகா 4:2) என்பதை உணர்ந்தேன்.

பயிற்சி மையம்

யோவேல் 2:28-இன் கடைசி கால தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில், குழந்தைகள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு கீழ்காணும் பயிற்சி நடத்தப்படும்.

  • கடைசிக் காலத்தில் சாத்தானுக்கு எதிராகப் போரிடுவதற்குப் பயிற்றுவித்து ஆயத்தப்படுத்தி தேவனின் சேனையை உயர்த்துவது பற்றிக் கற்பிப்போம் (வெளி. 12:7-11). சாத்தானின் மோசமான உத்திகள் மற்றும் தந்திரம் பற்றிய விவரங்கள் கற்பிக்கப்படும்.
  • தேவனுடைய போர்வீரர்கள், கர்த்தரில் தாங்கள் யார் என்பதை அறியவும், அவர்களின் வழிகள் மற்றும் கடைசிக் காலத்திற்கான சட்ட விதிகளை அறியவும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து ஆயத்தப்படுத்துவோம்.
  • கடைசிக் காலத்திற்கான இரத்த சாட்சிகளைக் குறித்துப் பயிற்சி அளித்து ஆயத்தப்படுத்துவோம் (வெளி. 6:9-11).
  • தீர்க்கதரிசிகளுக்குப் பயிற்றுவித்தல், தயார் செய்தல் மற்றும் வழிகாட்டுதல். தீர்க்கதரிசனக் கூட்டத்தின் கடைசி நாட்கள் வித்தியாசமாக இருக்கும். அவர்களின் ஆவிக்குரிய அனுபவங்களும், அவர்கள் செய்யும் வல்லமைமிக்க வேலைகளும் பிரம்மிப்பாய் இருக்கும்.
  • தீர்க்கதரிசன தேவாலயங்களை நிறுவப் போதகர்களுக்குக் கற்பித்தல், பயிற்சி அளித்தல் மற்றும் ஆயத்தப்படுத்துதல் . இதன் மூலம் கடைசி நாட்களின் அறுவடையை தேவனுடைய ராஜ்யத்தில் எவ்வாறு கொண்டு வந்து சேர்ப்பது மற்றும் எவ்வாறு விசுவாசிகளை தேவனுக்குள் வளர செய்வது போன்றவற்றை அவர்கள் அறிந்துக்கொள்வார்கள்.

கன்வென்ஷன் சென்டர் - 2,500 இருக்கைகள்

  • தீர்க்கதரிசன மாநாடுகள் மற்றும் கலந்துரையாடல் கூட்டங்களை வழக்கமாக நடத்தி, தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புவோம்.
  • ராஜ்யத்தின் சுவிசேஷம் இந்த இடத்தில் பிரசங்கிக்கப்பட்டு, அனைத்து நாடுகளுக்கும், ஜாதிகளுக்கும் , மக்கள் கூட்டத்திற்கும் சாட்சியாக உலகிற்கு நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் (மத் 24:14).

பயிற்சி மையத்தில் பார்வையாளர் அரங்கம், தனி வகுப்பறைகள் மற்றும் தங்கும் வசதிகள் இருக்கும். தற்காலத்து அதிநவீன தொழில்நுட்பத்துடன் இது அலங்கரிக்கப்படும்.

உலகெங்கிலும் உள்ள தேவனின் தனித்துவம் நிறைந்த உண்மையான தீர்க்கதரிசிகளை மக்களுக்குக் கற்பிக்கவும், பயிற்சி செய்யவும் நாங்கள் அழைத்து வருவோம். இது சாதாரண வேதாகமப் பள்ளி அல்ல. இது ஆவியின் வகையான பயிற்சி மையமாயிருக்கும். அங்கு நீங்கள் பரிசுத்தவான்கள் மற்றும் தேவதூதர்களால் கற்பிக்கப்படுவதற்காகத் தேவனின் மகிமை பிரசன்னத்திற்குள் கொண்டு வரப்படுவீர்கள்.

சமீபத்தில் 40-நாள் ஒருங்கிணைந்த உபவாசத்தை மேற்கொண்டோம். அப்போது, அவர்களில் பலர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அனுபவத்தை பெற்றார்கள் . அங்கே, அவர்கள் கர்த்தரால், பரிசுத்தவான்கள் மற்றும் தேவதூதர்களால் மகிமையில் கற்பிக்கப்பட்டனர்.

தீர்க்கதரிசிகளான மோசே, எலியா மற்றும் யோவான்ஸ்நானன் இப்படித்தான் கற்பிக்கப்பட்டனர்.

கடைசி நாட்களின் தீர்க்கதரிசன தலைமுறையினர் கடைசிக் காலத்திற்கென பரலோகத்துடன் இணைந்து பணியாற்றக் கற்றுக்கொடுக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்படுவார்கள் (எபி 11:40, ஏசா 54:13). தீர்க்கதரிசி மோசேக்கு தெய்வீகக் கூடாரத்திற்கான மாதிரி வெளிப்படுத்தப்பட்டபோது, பரலோகத்துடன் இணைந்து பணியாற்றினார்; தீர்க்கதரிசி எலியா தேவதூதர்களுடன் இணைந்து பணியாற்றினார் (1 இராஜா 19:5-7; 2 இராஜா 1:3,15); தீர்க்கதரிசிகளான மோசேயும் எலியாவும் வந்து கர்த்தராகிய இயேசுவிடம் பேசியபோது பரிசுத்தவான்களுடன் இணைந்து இயேசு பணியாற்றினார் (லூக்கா 9:30-31).

“வாருங்கள், கடைசிக் காலக் திட்டத்தை நிறைவேற்றுவோம்"