காணிக்கை பங்காளர்
"தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்." (மத்தேயு 10:41)
பங்காளர் ”பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஒரு கோட்பாடுகளில் ஒன்று”
1-சாமுவேல் 30-இல் நாம் பங்காளர் பற்றிய போதனையைப் பார்க்கலாம். தாவீதும் அவரது ஆட்களும் அமலேக்கியர்களால் எடுத்துச் செல்லப்பட்ட தங்கள் குடும்பத்தினரையும் பொருட்களைத் திருடிச் சென்றவர்களையும் தேடி வந்தனர். தாவீது அவர்களைப் பிடித்தபோது, தன்னுடைய 200 ஆட்கள் சண்டையிட முடியாத அளவுக்குச் சோர்வடைந்தனர். எனவே, தாவீது அவர்களைப் பின் தங்கியிருந்து, பொருட்களைப் பாதுகாக்கச் சொன்னார் .
போருக்குப் பிறகு, சண்டையிட்ட மனிதர்கள் கொள்ளையடித்ததைத் தங்கியிருந்தவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. அப்போது தாவீது, 1 சாமு. 30:24-இல் “யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றார் .” இந்தப் பதில் 'பங்கிடுதல்' குறித்த வேதாகமக் கொள்கையை நமக்கு வெளிப்படுத்துகிறது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இந்தக் கொள்கையை மத் 10: 41-42 ஆகிய வசனங்களில் உறுதிப்படுத்துகிறார். "தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; மேலும், இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."
பங்காளர்களே! நீங்கள் ஜெபிக்கும் ஒவ்வொரு ஜெபத்திற்கும் நீங்கள் ஊழியத்தில் விதைக்கும் ஒவ்வொரு உதாரத்துவமான காணிக்கைக்கும் தேவன் உங்களுக்கு அதற்கான பலனை அளிக்கிறார். ‘பங்காளர்கள்’ இயேசு ஊழியங்களுக்குத் தேவன் அளித்த சிறந்த வரமாகும். அவர்கள் தேவனின் அழைப்பை ஏற்று, நற்செய்தியுடன் உலகைத் தொடும் தரிசனத்தைப் பகிர்ந்துகொள்ளவும், சகோதரர் சாது சுந்தர் செல்வராஜ் ஐயாவுடன் ஜெபத்தில் நிற்கவும், உலகளாவிய இந்த ஊழியத்திற்கென வழக்கமான முறையில் நிதி உதவி செய்யவும் முன்வந்துள்ளனர்.
நாங்கள் உண்மையிலேயே தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் மற்றும் பங்காளர்களின் உண்மையுள்ள ஆதரவிற்காக நன்றி கூறுகிறோம். உலகம் முழுவதிலும் ஊழியம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது , கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பு மற்றும் சுகமளிக்கும் வல்லமையுடன் நாம் உலகை சந்திக்கும் போது , தேவன் செய்து வரும் அனைத்து நன்மைகளுக்காகவும் தேவாதி தேவனுக்கு மகிமையைக் செலுத்துகிறோம்.
பங்காளரின் சலுகைகள் கீழ்வருமாறு:
- தனிப்பட்ட பங்காளர் கடிதங்கள்
- சகோதரர் சாது சுந்தர் செல்வராஜ் மற்றும் குழுவினரின் தினசரி ஜெபம்