நாங்கள் யார்?
கர்த்தருடைய வருகைக்கான வழியை ஆயத்தப்படுத்துதல்
சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் இயேசு ஊழியங்களின் நிறுவனர் ஆவார். இது ஒரு தீர்க்கதரிசன-சுவிசேஷப் பணியாகும். கிறிஸ்து இயேசுவை அதிகம் அறியாத சமூகத்திற்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்கான கர்த்தரின் அழைப்பை சாது ஐயா அவர்கள் இவ்வூழியத்தின் மூலம் நிறைவேற்றி வருகிறார். சாது ஐயாவின் மீதுள்ள தேவனின் அளவுகடந்த அபிஷேகம், அற்புதங்கள் அடையாளங்கள் மூலம் வெளிப்படுகிறது. 1979-ஆம் ஆண்டு முதல், தேவன் சாது ஐயாவை உலகின் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று தமக்கு சாட்சியாக நிறுத்தியுள்ளார்.

வெப் ஸ்டார்
சகோதரர் சாது சுந்தர் செல்வராஜ் அவர்களின் புத்தகங்கள், காணொளிகள் மற்றும் ஒலிப்பதிவுகளை எங்கள் வெப் ஸ்டார்-ல் உங்களுக்கு விருப்பமான தொகையைக் காணிக்கையாகக் கொடுத்து, பதிவிறக்கம் செய்யலாம். தேவ சிங்காசனத்திலிருந்து வரும் அற்புதமான வெளிப்பாடுகள் மற்றும் போதனைகளைத் தவறவிடாதீர்கள்.
மேலும் பார்க்ககர்த்தருடைய வார்த்தை
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்
- (மத்தேயு 6:33)
தம் மக்களின் வாழ்வில்
தேவன் செய்த நன்மைகள்!
நான் இப்போதுதான் மின்னஞ்சலைத் திறந்து எனது ஜெப விண்ணப்பத்திற்கான தங்களின் பதிலைப் படித்தேன். நான் மிகவும் உற்சாகமடைந்தேன். நான் படித்து முடிப்பதற்குள் அழ ஆரம்பித்தேன். இது என் பிதாவின் அன்பின் வெளிப்பாடாக இருந்தது. ஆனால் நான் ஜெபித்திருந்த அதே குறிப்பிட்ட வார்த்தைகளை மின்னஞ்சலில் பார்த்தபோது, அவர் என் ஜெபத்தைக் கேட்கிறார் என்று நான் அறிந்தேன். நான் ஜெபித்த ஜெபங்கள் தேவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதால் அது அதிக மகிழ்ச்சியைத் தந்தது. தங்கள் ஜெபங்களுக்காக நன்றி. இயேசுவுக்கு நன்றி!
கேபி
கரீபியன்
‘தேவ பக்தியை நோக்கி’ என்ற தங்கள் புத்தகத்தைச் சமீபத்தில் நான் படித்தேன். ‘கழுகுகள் போலக் காத்திருங்கள்’ உட்பட தங்களின் பல புத்தகங்களையும் படித்திருக்கிறேன், படித்ததில் மிக்க மகிழ்ச்சி. கர்த்தருக்காகக் காத்திருப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் ஒரு புத்தகத்தை நான் முதன்முறையாகக் கண்டேன். அன்றிலிருந்து, தங்கள் புத்தகத்தில் தாங்கள் கொடுத்த போதனையைக் கொண்டு நான் கர்த்தருக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன். தங்களின் சோதனையைப் பகிர்ந்தமைக்கு நன்றி! இது மிகப்பெரிய உதவியாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தது.
நிக்கோல் கியான் மின்
சிங்கப்பூர்
நான் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், நான் குணமடைய ஜெப விண்ணப்பத்தை அனுப்பினேன். நான் குணமடைந்தாலும், பயங்கரமான இன்னல்களுக்கு ஆளானேன். என்னால் தூங்கவோ ஓய்வெடுக்கவோ முடியவில்லை; பயத்தையும் பதற்றத்தையும் அனுபவித்தேன். மேலும், நான் மன அழுத்தத்தை எதிர்நோக்கினேன். தேவன் தங்கள் ஜெபங்களுக்குக் கிருபையாக பதிலளித்தார். இப்போது நான் குணமடைந்தேன்; நான் சுதந்திரமாக இருக்கிறேன்; என்னால் ஓட முடியும்; என்னால் சாப்பிட முடியும்; நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
மேபல் அகின்லாபி
தென்னாப்பிரிக்கா
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக. உங்கள் ஜெபங்களின் பதில் எனக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளித்து ஊக்கப்படுத்தியது. எங்கள் ஜெபங்களைக் கேட்டதற்காகவும், தேவனுடைய நல்ல வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளுக்காகவும் நான் தேவனுக்கு எவ்வளவு நன்றியுடன் இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை.
கிரிசெல்டா புளோரஸ்
பிலிப்பின்ஸ்
"என் சிங்காசனம் நிலைநிறுத்தப்பட எனக்கு ஓர் இடத்தை உருவாக்குங்கள்!"
என் வாழ்நாள் முழுவதும் சில அற்புதமான ஆவிக்குரிய தருணங்களை நான் அனுபவித்திருக்கிறேன். தேவனாகிய கர்த்தர் என்னிடம் தெளிவாகப் பேசி, அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்களை பலமுறை அளித்திருக்கிறார்.
