சாட்சிகள்


தேவன் தம்முடைய மக்களின் வாழ்வில் செய்த நன்மைகள்!

வெளிப்படுத்தின விசேஷம் 6-ஆம் அதிகாரத்தைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்காக நன்றி! அந்தச் செய்தியில், தேவன் நமக்குச் செய்தவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். நான் முழங்காலில் நின்று, கண்ணீருடன் மனந்திரும்புதலின் ஜெபத்தை ஏறெடுத்துக் கொண்டிருந்தபோது, கர்த்தர் என் இடது பக்கத்தில் முழங்காற்படியிட்டு, என் தோள் மீது கைபோட்டு அரவணைத்து, “நான் உன்னுடன் இருக்கிறேன்” என்று மெல்லிய சத்தத்தில் என் காதில் சொன்னார்.

M F

சுவிட்சர்லாந்து

உங்கள் செய்திகள் மற்றும் தீர்க்கதரிசனங்களைக் கேட்டதன் மூலம் நான் அறிந்திராத சத்தியங்களை அறிந்துகொள்ள தேவன் என் மனக்கண்களைத் திறந்திருக்கிறார். உங்கள் ஊழியத்திற்கென்று விதைத்த பின்னர், தேவன் தம் வார்த்தையின் மூலம் வாக்குப்பண்ணியபடி, என் வங்கிக் கணக்கில் வராமல் தடைபட்டிருந்த பணத்தை அருளிச் செய்தார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

R R

அஸ்ஸாம், இந்தியா

எனக்குத் தொண்டையில் வந்த கேன்சர் வியாதியால் மிகவும் அவதிப்பட்டபோது, ஜெப உதவி கேட்டு இயேசு ஊழியங்களுக்கு ஈமெயில் அனுப்பினேன். எந்த மருந்தும் எடுக்காமல் இப்போது எனக்கு நல்ல சுகம் கிடைத்திருக்கிறது. தேவனுக்கு ஸ்தோத்திரம்.

S M

டான்சானியா

மூச்சுத்திணறல் காரணமாக மூச்சு விடுவதில் மிகவும் சிரமப்பட்ட நான் அதனால் மேலும் பல கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். அந்நிலையில் எனக்கு சுகம் கிடைக்க ஜெபிக்குமாறு உங்களுக்கு எழுதியிருந்தேன். தேவனுடைய இரக்கத்தினால், இயேசு ஊழியங்களுக்கு ஜெப விண்ணப்பம் அனுப்பிய அடுத்த நாளிலிருந்தே நான் சுகமடையத் தொடங்கினேன். என்னைச் சுகமாக்கிய கர்த்தருக்கு நன்றி.

P G

யு.கே

நாங்கள் காரில் வெளியில் சென்று வீடு திரும்பியபோது, ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து கார் ஓட்ட முடியாததால், சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டோம். ஆலங்கட்டிகள் விழும் சத்தம் பயங்கரமாகக் கேட்டது. திடீரென ஏஞ்சல் டிவி-யின் வாக்குத்தத்த வசனம் என் நினைவுக்கு வர, அதை அறிக்கையிட்டு ஜெபித்தேன். ஒருசில நிமிடங்களுக்குள் ஆலங்கட்டி மழை நின்றுவிட்டது. அதன் பின்னர் பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்தோம்.

M

பெங்களூரு, இந்தியா

சில வருடங்களாக இந்த ஊழியத்தின் பங்காளராக இருக்கும் நான் அவ்வப்போது காணிக்கை அனுப்பிக் கொண்டிருந்தேன். சிறு காணிக்கையாக மாதந்தோறும் ரூ.1000/- அனுப்பிக் கொண்டிருந்த என்னிடம் கர்த்தர் பேசி, JM கட்டிட நிதிக்காக காணிக்கை அனுப்பச் சொன்னார். நான் ரூ.3000/- அனுப்பினேன்.
என்னை இவ்வாறு வழிநடத்திய தேவனுக்கு நன்றி, ஏனென்றால் ஏஞ்சல் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளும் எனக்கு ஆசீர்வாதமாக இருக்கின்றன. அவற்றின் மூலம் ஆவிக்குரிய வளர்ச்சியும், உற்சாகமும் அடைவதோடு, ஜெபிக்கவும், ஆவிக்குரிய யுத்தம் செய்யவும் கற்றுக் கொண்டு, ஆவிக்குரிய உணர்வடைந்து வருகிறேன்.

V B

தெலுங்கானா, இந்தியா

“கடைசி கால ஏழு கொம்புகளின் அபிஷேகம் (Last Days Seven Horns Anointing)” மற்றும் “கைலாச மகரிஷி (The Maharishi of Mt. Kailash)” என்ற இரண்டு புத்தகங்களையும் வாசித்து முடித்துவிட்டேன். இந்த அற்புதமான புத்தகங்களை எழுதியதற்காக பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

D

மதுரை, இந்தியா

பொருளாதார விடுதலைக்காக ஜெபிக்கும்படி கேட்டு எழுதியிருந்தேன். நீங்கள் எனக்கும் என் குடும்பத்திற்கும் பொருளாதார ஆசீர்வாதத்திற்கான வாசல்கள் திறக்கும்படி ஜெபித்தீர்கள். கர்த்தர் எங்களுக்கு ஒரு புதிய தொழிலைக் கொடுத்திருக்கிறார், அது நன்றாக வளர்ச்சியடைந்து வருகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

I

நைஜீரியா

தீர்க்கதரிசி சாது அவர்கள் எழுதிய “கர்த்தருக்குக் காத்திருத்தல் (Waiting On God)” என்னும் புத்தகத்தை வாசித்து முடித்ததை சாட்சியாக சொல்ல விரும்புகிறேன். அந்த புத்தகம் எனக்கு உண்மையில் மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது, ஒரு புதுவித உணர்வடைய என் கண்களும் காதுகளும் திறக்கப்பட்டன. மிக்க நன்றி.

D

யு.எஸ்.ஏ

உங்கள் புத்தகங்களும் போதனைகளும் என் வாழ்க்கையை மாற்றியிருக்கின்றன. இயேசு அதிசீக்கிரமாக வரும் காலம் இதுவே என்றும், மனந்திரும்பி, நீதியும், பரிசுத்தமும் உள்ளவர்களும், கறையற்றவர்களும், இருதயத்தில் பெருமையற்றவர்களுமாக வாழுங்கள் என்றும் சொன்னீர்கள். உங்கள் போதனைகள் எனக்கு ஆசீர்வாதமாகவும், உதவியாகவும் இருக்கின்றன. என்னுடைய ஆவியின் எழுப்புதலுக்கு நீங்கள் அதிகம் உதவி வருகிறீர்கள்.

M

ஆப்பிரிக்கா, ஸிம்பாப்வே

எனக்கு சம்பள உயர்வு கிடைக்க ஜெபிக்கும்படி கேட்டு எழுதியிருந்தேன். அதோடு, எனக்கு உயர்வு கிடைத்ததும், இயேசு ஊழியங்களுக்கு அனுப்பும் மாதாந்திர காணிக்கையையும் கூட்டிக் கொடுப்பதாக பொருத்தனை செய்தேன். கர்த்தராகிய இயேசுவுக்கு நன்றி, ஏழு வருடங்களாக பிள்ளையற்ற மலடியாக இருந்த எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்த அதே நாளில் தேவன் பதவி உயர்வும் அருளிச் செய்தார்.

S

ஆஸ்திரேலியா

நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக்காக ஜெபிக்கும்படி கேட்டு உங்களுக்கு எழுதியிருந்தேன். நான் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல வேலையும், சம்பள உயர்வும் கிடைத்தது.
என்னுடைய தசமபாகங்களும், காணிக்கைகளும் சரியான இடத்தில், நல்ல நிலத்தில் சென்று சேருவதைக் குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஜெபங்களுக்கு நன்றி.

K K

இந்தியா

நான் தீர்க்கதரிசி சாது அவர்களை அறிந்ததைக் குறித்து மிகுந்த நன்றியுணர்வுடன் உள்ளேன், அதனால் என்னில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன, வாழ்க்கையைக் குறித்த என் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. ஜீவனுள்ள மெய்யான தேவனைப் பின்பற்றுவதைப் பற்றிக் கற்றுக் கொள்ள இன்னும் ஏராளம் உண்டு.

J D

பிலிப்பைன்ஸ்

என் தகப்பனார் மதுபான அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற ஜெபிக்குமாறு கேட்டு உங்களுக்கு எழுதியிருந்தேன். உங்கள் வல்லமையான ஜெபங்களுக்கு நன்றி. இப்போது என் தகப்பனார் மதுபான அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார். அல்லேலூயா!
“ஆசரிப்புக்கூடாரத்தின் ஜெப இரகசியம் (Prayer Secret in the Tabernacle)” என்ற உங்கள் புத்தகத்தை வாசித்ததிலிருந்து தேவன் என்னுடன் பேசி கர்த்தரோடு நெருங்கிய ஐக்கியம் கொள்ளும்படிச் செய்திருக்கிறார். உங்கள் புத்தகங்களுக்காக நன்றி.

A K

நேபாளம்

உங்கள் மின்-புத்தகம் எனக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது. எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதைச் செய்யும்போது என் ஜெபங்கள் கேட்கப்படும் என்பதை அறிந்து கொண்ட எனக்கு மிகுந்த சந்தோஷமும், சமாதானமும் உண்டாயிற்று. பிதா நம்மை அதிகமாக நேசிப்பதால், நாம் தம்முடைய சித்தத்தின்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்காக இந்த சத்தியங்களை வெளிப்படுத்துகிறார் என்ற உண்மையை அறிந்த என் இருதயம் இப்போது களிகூருகிறது. இந்த மின்-புத்தகத்தில் உள்ள எல்லா சத்தியங்களையும் நான் பின்பற்றுவேன்.

S M

பிலிப்பைன்ஸ்

என் திருமணத்திற்காகவும், அதற்கான பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிக்குமாறு கேட்டு எழுதியிருந்தேன். கர்த்தருடைய கிருபையினால், எந்தத் தடையும் இன்றி தேவபக்தியுள்ள ஒருவருடன் என் திருமணம் சமாதானமாக நடந்தது. நீங்கள் எனக்கு எழுதிய பதிலில் குறிப்பிட்டிருந்த வாக்குத்தத்தத்தின்படியே நடந்தது. தேவன் எனக்கு ஒரு போதகரைக் கணவராகக் கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை, என் கணவரும் ஜெபிக்கும் ஒரு வாழ்க்கைத்துணை கிடைக்க வேண்டுமென்று 44 ஆண்டுகள் ஜெபத்துடன் காத்திருந்தார். சர்வவல்லமையுள்ள தேவனுக்கு சகல மகிமையும் உண்டாவதாக.

R

இந்தியா

உங்களுடைய போதனைகளும், வழிகாட்டல்களும், ஜெபங்களும் எனக்கு மிகுந்த ஆசீர்வாதமாக உள்ளன. உங்கள் போதனைகளைக் கேட்கத் தொடங்கியதில் இருந்தும், SOP நைஜீரியா கூடுகையில் கலந்து கொண்டதிலிருந்தும் கர்த்தரை ஆழமாக அறிந்து வருகிறேன். SOP-யில் நீங்கள் மிகுந்த வாஞ்சையுடனும், அன்புடனும் கற்றுக் கொடுத்தீர்கள். உங்களையும், உங்கள் போதனைகளையும், அறிவுரைகளையும், தீர்க்கதரிசனங்கள் அனைத்தையும் முழுமனதுடன் நம்புகிறேன். SOP நைஜீரியாவில் கர்த்தர் எங்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்வார் என்று சொன்னீர்களோ அவற்றையெல்லாம் விசுவாசித்துப் பெற்றுக் கொண்டேன்.

C N

நைஜீரியா

சரீர சுகத்திற்காக ஜெபிக்கும்படிக் கேட்டிருந்த நான் இயேசுவின் மூலம் சுகம் பெற்றுக்கொண்டேன். என் உதிரப்போக்கு நின்றுவிட்டது. இயேசு என்னை சுகமாக்கியிருக்கிறார். எல்லா மகிமையும் இயேசுவுக்கே.

N

ராஞ்சி, இந்தியா

என் திருமணத்தைக் குறித்த தேவசித்தத்தை அறியவும், வாழ்க்கையில் நல்ல நிலையில் அமரவும், திருமணத்தைப் பற்றிய குழப்பங்கள் நீங்கவும் ஜெபிக்குமாறு கேட்டு எழுதியிருந்தேன். உங்கள் ஜெபங்களுக்கு நன்றி, கர்த்தர் அதைச் செய்து முடித்திருக்கிறார்.

C B

கானா

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட என் மகன் குடும்பத்திற்காக ஜெபிக்கும்படி உங்களிடம் கேட்டிருந்தேன். அவர்களுக்காக ஜெபித்ததற்கு நன்றி. அவர்கள் முற்றிலும் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

G T

ஆஸ்திரேலியா

என் மகளுடைய பல் மருத்துவப் படிப்பின் அரசாங்கத் தேர்வுகளுக்காக ஜெபிக்கும்படி கேட்டு உங்களுக்கு எழுதியிருந்தேன். தேர்வு முடிவுகள் வந்தபோது, அவள் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்தது! உங்கள் ஜெபங்களுக்கு மிக்க நன்றி.

C F

பிலிப்பைன்ஸ்

வேலை தேடிக் கொண்டிருந்த எனக்கு 80% அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலை கிடைத்தது. உங்கள் ஜெபங்களுக்கு நன்றி.

V N

பெங்களூரு, இந்தியா

தேவனால் ஏவப்பட்டு நீங்கள் எழுதிய “கழுகுகளைப் போலக் காத்திருங்கள் (Wait As Eagles)” என்ற புத்தகம் எனக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது.

S W

கானா

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையால் அசுத்த ஆவிகளின் கட்டுகளிலிருந்து நான் விடுதலை பெற்றிருக்கிறேன். உங்கள் ஜெபங்களுக்கு மிக்க நன்றி.

H

யு.எஸ்.ஏ

உங்கள் சாட்சிகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள

இங்கே பதிவு செய்யவும்!