ஆரோன் & ஊர்


ஆரோன் & ஊர் ஜெபப் பங்காளராக ஆவதற்குக் கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.

aaronnhur

ஜெப வீரர்கள்

சகோதரர் சாது சுந்தர் செல்வராஜ் அவர்களின் அன்பான ஊழிய நண்பர் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஜெபநடை செய்துகொண்டிருந்தார். அவர் ஜெபத்தோடு நடந்துகொண்டிருந்தபோது, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் போர்க்கப்பலில் இருந்து கடலில் மூழ்கி உயிரிழந்த வீரர்களின் பெருமையைச் சொல்லும் ஒரு நினைவுச்சின்னத்தைப் பார்த்தார். சில வீரர்கள் 5 நாட்களாகக் கடலில் வாழும் சுறா மீன்களோடு போராடியிருந்தனராம். அந்த நினைவுச்சின்னத்தில் இருந்த ஒரு பெயர்ப்பலகையில் (தகட்டில்) அந்தக் கப்பல் ஏன் மூழ்கியது என விவரிக்கப்பட்டிருந்தது. அந்தப் போர்க்கப்பல் எந்த ஒரு துணைக்கப்பலின் பாதுகாப்பும் இல்லாமல் சென்றிருந்தது.

கப்பல் பாதுகாப்பு இல்லாமல் சென்றதன் விளைவாக, 500-க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட ஒரு முழுக் கப்பலே கடலில் மூழ்கியது. பல போதகர்கள், சுவிசேஷகர்கள் மற்றும் மிஷனரிகளின் நிலமையும் சிலவேளைகளில் இப்படித்தான் இருக்கிறது. பல அற்புதங்களைச் செய்த பெரிய அப்போஸ்தலனாகிய பவுல் கூட, பல சந்தர்ப்பங்களில், ‘எங்களுக்காக ஜெபியுங்கள்’ (1 தெச. 5:25; 2 தெச. 3:1; எபி 13:18) என்ற ஒரு வேண்டுகோளை தன்னுடைய நிரூபங்களில் அனுப்பினார்.

அக்டோபர் 15, 1998 அன்று பிற்பகலில், அன்றைய மாலைக் கூட்டத்திற்காக சாது ஐயா லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் ஜெபித்துக் கொண்டிருந்தார். பின்னர் அவர் கர்த்தராகிய இயேசுவின் சாயலைக் கண்டார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து , ‘ஊழியம் செழிக்க வலிமையான ஜெப அடித்தளம் தேவை’ என்று அவருக்கு ஆலோசனை கூறினார். போரில் இஸ்ரவேலின் வெற்றிக்காக மோசேயின் கரங்களைத் தாங்க ஆரோனும் ஊரும் தேவைப்பட்டது போல (யாத் 17:12), சாது ஐயாவையும், தொடர்ந்து விரிவடைந்து வரும் இந்த ஊழியத்தையும் நிலைநிறுத்த ஜெப வீரர்கள் தேவை.

மக்கள், ஐயாவிடம் "சகோதரரே! நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம்" என்று அடிக்கடி சொல்வார்கள்.. இப்படிப்பட்ட பரிசுத்தவான்களின் ஜெபங்கள்தான் இத்தனை வருடங்களாக ஊழியப் போர்முனையில் சாது ஐயாவைத் தாங்கி நிற்கிறது. எங்களுக்காக ஜெபம் செய்பவர்களில் பெரும்பாலானோர் முகம் தெரியாதவர்கள். எனவே, ‘ஆரோன் மற்றும் ஊர் ஜெப வீரர்கள்’ என்ற இந்தப் புதிய அமைப்பை நிறுவியுள்ளோம்.

தனக்காகவும் இந்த ஊழியத்திற்காகவும் ஜெபிப்பதற்கும் பரிந்துபேசுவதற்கும் உண்மையாகவும் தீவிரமாகவும் ஒப்புவித்த அனைவருக்கும் சாது ஐயா தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்புவார். எங்கள் ஊழியம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எங்களுக்காக உங்கள் ஜெபத்தை எப்படி ஒருமுகப்படுத்தலாம் என்பதை அந்தக் கடிதம் விவரிக்கும்.

ஒவ்வொரு நாளும் எங்களுக்காக ஜெபிக்க ஏராளமான ஜெபப் பங்காளர்கள் தேவை. ‘வந்து எங்கள் கரங்களை உயர்த்த’ உங்களை அழைக்கிறோம். சாது ஐயாவும் தனது முழங்கால்களை முடக்கி, தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக உங்களைப் பற்றி தினமும் தேவனிடத்தில் குறிப்பிடுவார். உங்களின் ஜெபப் பங்களிப்பு இந்த ஊழியத்திற்கான தேவ திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்!

பங்காளரின் சலுகைகள் கீழ்வருமாறு:

  • தனிப்பட்ட பங்காளர் கடிதங்கள்
  • சகோதரர் சாது சுந்தர் செல்வராஜ் மற்றும் குழுவினரின் தினசரி ஜெபம்

இயேசு ஊழியங்கள் மற்றும் ஆரோன் & ஊர் ஜெப வீரர் பங்காளராக
ஆக இன்றே பதிவு செய்யுங்கள்!

பொது விவரங்கள்

நான் இவற்றுக்காக ஜெபிப்பேன்:

முதல் வரை

முகவரி விவரங்கள்

captcha text

படத்தில் உள்ள குறியீட்டை இங்கே உள்ளிடவும்: *

இயேசு ஊழியங்களுக்கான நிதிப் பங்காளர் ஆக இன்றே பதிவு செய்யுங்கள்!
இங்கே பதிவு செய்யவும்!